சமீபத்தில் இரண்டு நூல்கள் படித்து முடித்தேன். ஒன்று முப்பது வயதான ஒரு நகர நாகரீக மங்கையின் முதல் நூல், ஆங்கிலத்தில் எழுதியது. நகரத்தில் வாழும் ஒரு இளம் தம்பதியைப் பற்றியது. சுலபமான வார்த்தைகள், எளிய சொற்றொடர்கள், புத்தகம் முழுதும் மிக மெலிதாய் இழையோடும் நகைச்சுவை என்று சில நல்ல சேதிகள் நிறைந்திருந்தன. இரண்டாவது, அறுபது வயதுக்கும் மேலான ஒரு முதியவர் தமிழில் எழுதியது. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இவர் கதைகள் எழுதி வருகிறார். எப்படியும் ஒரு ஆயிரம் கதைகள் எழுதி இருப்பார். சில திரைப்படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். செல்வராகவன், சங்கர் போன்ற பல பெரிய இயக்குனர்களின் திரைப்படங்களுக்கு உரையாடல் எழுதி இருக்கிறார்.
தமிழகத்தின் சிறுநகரங்களில் இருக்கும் வயதான பெண்கள் எப்படி நம் சன் டிவி நாடகங்களில் மாமியார்-மருமகள், உறவுகள் பற்றி பார்த்து பார்த்து மூளையை மழுங்கடித்துக் கொள்கிறார்களோ, அதைப் போல நகரத்தில் வாழும் பெண்களும், பணக்காரப் பெண்களும் (சில ஆண்களும்) ஆங்கில தொலைகாட்சித் தொடர்களுக்கு அடிமைகள். பிரெண்ட்ஸ் , ஹவ் ஐ மெட் யுவர் மதர் போன்றவை இவ்வாறு உணர்வுகளை அதிகப்படியாய் சித்தரிக்கும் தொடர்கள்.
என் மேற்கத்திய நண்பர் ஒருமுறை சொன்னார், "ப்ரேண்ட்சில் வரும் காட்சிகளை வைத்து இப்படித்தான் எங்கள் சமுதாயம் இருக்கும் என்று நினைத்துக் கொள்ளாதே, அது சூப்பர்மேன் படத்தைப் பார்த்து விட்டு அமெரிக்க ஆடவர்கள் உள்ளாடையை ஆடைக்கு வெளியேதான் அணிவார்கள் என்று நினைத்துக் கொள்வதைப் போல". நம்மூரில் இருக்கும் மேட்டுக்குடி பெண்கள் இந்த நாடகங்களை உண்மை என்று நம்பி பார்த்து விட்டு, தன் வாழ்வை இந்த மிகைப்படுத்தப் பட்ட மாயையால் கொஞ்சம் சீரழித்துக் கொள்கிறார்களோ என்று அவ்வப்போது நான் யோசிப்பேன்.
சரி, சொல்ல வந்த சேதிக்கு வருகிறேன். நான் குறிப்பிட்ட அந்த ஆங்கில நூல், மேலே சொன்ன தொலைகாட்சி தொடர்களின் பாதிப்பினால் எழுதப்பட்டது. நடிகர் விசய், தன்னுடைய எல்லா படங்களிலும் ஒரு குத்துப் பாட்டு வைப்பதைப் போல, இக்கால ஆங்கில எழுத்தாளர்கள் எல்லோரும் எப்பாடுபட்டாவது தங்கள் கதையில் ஐஐடியை செருகி விடுகின்றனர். இந்த கதையின் நாயகனும் அப்படி ஐஐடியில் படித்தவர்தான். அவரும் அவருடைய மனைவியும் பிரிய முயற்சிக்கின்றனர். ஆனால் இந்திய குடும்ப சூழ்நிலைகள் அவர்களை பிரிய விடுகின்றனவா என்பதுதான் கதை. இதை மிக நகைச்சுவையாக எழுதி இருக்கிறார். ஆனால் மிக மிகப் போலியான காட்சி அமைப்புகள், கொஞ்சம் கூட நடைமுறைக்கு சாத்தியமில்லாத பணக்காரத்தனம், ஆடம்பரம், வெளிநாடு பயணம் என்று கதை கொஞ்சம் தத்தளிக்கிறது. எழுத்தாளரின் லாவகமான நடைதான் இந்த நூலை பிழைக்க வைக்கும் ஒரே காரணம். 200 பக்கங்கள் கொண்ட இந்த நூல் 200 ரூபாய்க்கு விற்கிறது. முதல் பதிப்பில் வெளிவந்த அத்தனை பிரதிகளும் விற்றுத் தீர்ந்து மறுபதிப்பிற்கு சென்றிருக்கிறது.
இரண்டாவதாக நான் சொன்ன தமிழ் புத்தகம், இரு பெண்களின் போட்டி பற்றி ஆரம்பித்து, அதில் எப்படி ஒரு பெண் இன்னொரு பெண்ணின் மகளை அவளிடம் இருந்து களவாடி, சினிமாவில் இறக்குகிறார் என்றும், அந்த பெண் சினிமாவில் சேர்ந்த பின் என்ன செய்கிறார் என்றும் செல்கிறது. எத்தனையோ பாத்திரங்கள் வந்தாலும் அத்தனையும் மனத்தில் நிற்கின்றது, அழுத்தம் திருத்தமான கதை, அதிர வைக்கும் வசனங்கள், அத்தனை அழகாய் உலக வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி பார்க்க வைக்கும் கதையோட்டம். எழுதியவர் முதியவர் என்பதால் அத்துணை (சரியா சொக்கன் ஐயா ?) அனுபவப் பகிர்வுகள். இந்தக் கதையை படித்து முடித்தவுடன், ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏதோ நமக்கு தெரிந்த நபர் என்பது போல் பிரமை ஏற்படும் அளவு உன்னதமான எழுத்து நடை. இந்த நூல் இரண்டு பாகங்களாக வெளி வந்துள்ளது. ஒவ்வொரு பாகமும் சுமார் 150 பக்கங்கள். ஆனால் விலை வெறும் 20 ரூபாய் தான்.
ஆங்கிலத்தில் எழுதியது என்ற ஒரே காரணத்தினால், ஒரு அறிமுக எழுத்தாளரின் சுமாரான நூல் இத்தனை அதிக விலையில் விற்றாலும் மக்கள் வாங்குகிறார்கள். ஆனால் அத்துணை நல்ல எழுத்தாளரின் நூல், தமிழில் எழுதப்பட்டது என்ற ஒரே காரணத்தால் விற்க சிரமப்படுகிறது. அண்மையில் நண்பர் கண்ணபிரான் அவர்களை, நீங்கள் ஏன் உங்கள் திருப்புகழ் உரையை நூலாக வெளியிடக் கூடாது என்று கேட்டேன். அதற்கு அவர், பெரிய பெரிய தமிழ் எழுத்தாளர்களின் நூல்களே வெறும் சில நூறுகள் தான் விற்கின்றன, அதனால் வலைப்பதிவாகவே எழுதி விடுவது உத்தமம் என்றார்.
சேத்தன் பகத் போன்ற எழுத்தாளர்களால் உந்தப்பட்டு, மிகக் குப்பையான எழுத்தாளர்கள் பெருகி, நம் இலக்கியத் தரம் குறைந்து கொண்டே வருகிறதோ !? ஆங்கில மோகத்தில் சிக்குண்ட நாம், நாம் ஆதரவளிக்க வேண்டிய தமிழ் நூல்களையும், எழுத்தாளர்களையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறோமா !? கல்கி, சாண்டில்யன் என்று ஒரு தலைமுறையிலும், சுசாதா, இராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன் என்று அடுத்த தலைமுறையிலும் (இலக்கியவாதிகளை சேர்க்கவில்லை, பெரும்பான்மை மக்களை தமிழ் படிக்க வைக்கும் எழுத்தாளர்களைப் பற்றி மட்டும் பேசுகிறேன்) உருவான எழுத்தாளர்களைத் தாண்டி, அடுத்த தலைமுறையில் அனைவரையும் கவரும் வகையில் எழுதும் எழுத்தாளர் சமூகத்தையும், அதனினும், தமிழ் படிக்கும் வாசகர் சமூகத்தையும் இழந்து வருகிறோமா !?