மேலாண்மை II

இது மேலாண்மை இரண்டாம் பாகம். மேலாண்மை முதல் பாகம் இங்கே . ஆனால் இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தனித் தனியாவே படிக்கலாம்.


பதிவு
முன்பு வழக்கமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த கடையின் முதலாளியம்மாள், தினமும் சாம்பார் சட்னி விநியோகத்துக்கு வந்து, தன் கஞ்சத்தனத்தை காட்ட ஆரம்பித்து விட்டார். பக்கத்தில் உள்ள கடைகளின் அளவுக்கு விலையை (தரத்தையோ, அளவையோ அல்ல) ஏற்றி விட்டார். அத்தோடு என் நண்பனும் உடல் எடையை குறைக்க வேண்டும் அதனால் சப்பாத்தி சாப்பிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். அதனால் அருகில் உள்ள வேறு ஒரு கடைக்கு, நானும் என் நண்பனும் செல்ல ஆரம்பித்தோம். 



"தையல் சொல் கேளாதே" என்பது ஆணாதிக்க கருத்து என்று நண்பர் சொக்கன் ஒரு நாள் ட்விட்டரில் சொல்லப் போக, நான் இந்த முதல் கடையின் கதையை கொஞ்சம் நீளமாக ட்வீட்டி இருந்தேன். அந்த கிளைக் கதை (பதிவுக்குள் பதிவு) கீழே.


பதிவுக்குள் பதிவு
நான் திருமணமாகாத கன்னிப் பையன் (இதுக்கு ஏதாவது தமிழ் வார்த்தை இருக்கா ? பெண்களுக்கு மங்கை, மடந்தை என்று இருப்பதைப் போல) என்பதால் தினமும் ஏதாவது ரோட்டோரக் கடையில் தான் சாப்பிட்டு வருகிறேன். இந்த கடைகளில் பெரும்பாலும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தான் வேலை செய்வார்கள். எல்லா கடைகளிலும், என்றெல்லாம் பெண்கள் கல்லாவை கவனித்துக் கொள்கிறார்களோ, அவர்கள் தான் பரிமாறுவதையும் பார்த்துக் கொள்வார்கள். எல்லா கடைகளிலும் நான் கவனித்த சேதி, பெண்கள் நிரொம்ப கருமித்தனமாய், கொஞ்சூண்டு சாம்பார் மட்டுமே ஊற்றுவார்கள். சட்னி வேணுமா என்று கேட்பார்கள், அவர்களாக வைக்க மாட்டார்கள். எப்போதுமே கொஞ்சம் குறைவாகவே சமைப்பதால் அவர்களுக்கு மீந்து போவதும் கிடையாது. ஆனால் எப்படியாவது நிறைய பேருக்கு விற்பனை செய்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம், அவர்கள் செய்கையில் தெரியும். நாம் இன்னும் கொஞ்சம் சாம்பார் போடுங்க என்று கேட்டால், ஏதோ பேருக்கு கரண்டியிலிருந்து ஓரிரு சொட்டு மட்டும் போடுவார்கள். ஆண்கள் பரிமாறும் போது, போதுமான அளவு பரிமாறுவார்கள். அதே போல பெண்கள் சமைக்கும் போது (அதே கடைகளில்), அளவை வேண்டுமென்றே குறைவாக செய்வார்கள். உதாரணத்துக்கு, பூரி செய்கிறார்கள் என்றால் சிறிய அளவு மாவை கிள்ளி, மிக மெல்லியதாக தேய்ப்பார்கள். லாப்டாப்போடு நிற்கும் நான் சாப்பிட்ட உணவுகளுக்கு நானே கணக்குப் போட்டு, இவ்வளவு விலை என்று கூறி பணத்தைக் கொடுத்தால், ஆண்கள் சரி என்று வாங்கிக் கொள்வார்கள். ஆனால் பெண்களோ என்னை வாரம் முழுக்கப் பார்த்தாலும் ஒவ்வொரு ஐட்டமாகக் கேட்டு அவர்களே கணக்கு போடுவார்கள். "யாரையும் நம்பாமை, முடிந்தவரை எல்லா காசையும் தானே வைத்துக் கொள்வது, நிறைய சம்பாதிக்க நினைப்பது, தொலைநோக்குப் பார்வை இன்றி குறுகிய கால இலாப மனப்பான்மையோடு செயல்படுவது" என்று பெண்களிடம் பல குணங்களை இந்த ரோட்டோர உணவகங்களில் காணலாம். ஏதோ ஒரே ஒரு கடையில் பார்த்து விட்டு இதை நான் சொல்லவில்லை. பல கடைகளில் இவற்றை நான் கவனித்திருக்கிறேன். தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற தீவிர உந்துதலில் அவர்கள் இதைப் போல எமோஷனலாக நிறைய செய்வார்கள். அதனால் "தையல் சொல் கேளாதே" என்பது பல நேரங்களில் பொருத்தமானது என்பது என் தாழ்மையான கருத்து. ஆனால் எல்லா பெண்களுக்கும் இது பொருந்தாது. பெண்கள் கல்வி பெற்று விட்ட இந்த காலத்தில் இது பெருமளவு முன்னேறி விட்டது. "ட்விட்டரில் இருக்கும் எந்த பெண் பேச்சையும் கேள்" என்று நாம் புதுமொழியே வைக்கலாம் :-)

உள்கதை முடிந்தது. இப்போது வெளிப் பதிவுக்கு வருவோம்.

பதிவு தொடர்ச்சி 
இப்போது புதிதாக சாப்பிடத் தொடங்கி இருக்கும் கடையில் எப்போதும் கலகலப்பாக பேசும் புரோட்டா மாஸ்டர் ஒருவர் இருப்பார். இன்று சாப்பிட சென்ற போது, முதலாளி நின்று தோசை போட்டுக்  கொண்டிருந்தார். மாஸ்டரைக் காணவில்லை. எனக்கு இரண்டு சப்பாத்தி சொல்லி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, இன்னும் இரு ரெகுலர் வாடிக்கையாளர்கள் வந்து புரோட்டா இருக்கிறதா என்று வினவினர். "மாஸ்டர் வரலை, எனக்கும் வயசாயிடுச்சு அதனால புரோட்டா போடலை" என்று அந்த முதலாளி கூறினார். 

தோசைக்கல் பக்கத்தில் இருந்த சட்டியில் ஒரு ஏழெட்டு புரோட்டாக்கள் இருந்தன. "அதுதான் கொஞ்சம் இருக்கே, ஏன் இல்லைன்னு சொன்னீங்க ?" என்று அவர்கள் போன பிறகு முதலாளியிடம் கேட்டேன். அதற்கு அவர், "இவுங்க ரெகுலர் கஸ்டமருங்க. அது மதியம் போட்ட புரோட்டா. இதை சூடாக்கி கொடுத்து அவுங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துட்டா கடைக்கு வரமாட்டாங்க. ரெகுலர் கஸ்டமர்களிடம் சில்லறை லாபம் பாக்க நெனைக்கக் கூடாது. அதான் தரலை. அவுங்க திருப்திதான் நமக்கு முக்கியம்" என்றார். 

மத்தியானம் வந்த மாஸ்டர் என்ன திடிர்னு சாயந்தரத்துக்குள்ள கெளம்பிட்டாரு என்று விசாரித்தேன். அதுக்கு அவர், "எங்க! நேத்து ராத்திரி ஐநூறு ருபாய் சம்பளம் வாங்கினான். உடனே கையோட இதோ பக்கத்துல இருக்க சாராயக் கடையில இருநூறு ரூவாக்கு சரக்கு வாங்கினான். இன்னைக்கு மதியம் இந்த இந்திக்காரன் (இன்னொரு வேலையாள், தட்டு கழுவும் வடகிழக்கு இந்திய இளைஞன்) கிட்ட இருநூறு ரூபா கடன் வாங்க வந்தான். நான் கொஞ்சம் பேசி புரோட்டா போடச் சொன்னேன். சரின்னு மத்தியானம் வேலை செஞ்சுட்டு, இருநூறு ருபாய் வாங்கிட்டு கெளம்பிட்டான். இனிமே நாளைக்குதான் வருவான். எப்ப பாத்தாலும் குடி. இந்த மாச்டருங்க எல்லாத்துக்கும் குடி ஒரு சாபம். அந்த காலத்துல, நான் 1960 ல பெங்களூருக்கு வந்தேன். [கேயார்] மார்கெட்டில வெங்காயம் வாங்கிட்டு அங்கேயிருந்து வண்டியை திப்பஸந்திரா மார்க்கெட் வரைக்கும் தள்ளிகிட்டே வருவேன். ரிங் ரோடு கூட அப்போ கிடையாது. வந்து வெங்காயம் வித்துட்டு ராத்திரி வண்டியிலேயே படுத்து தூங்கிடுவேன். வெங்காயம் போடுற சாக்கு தான் போர்வை. இங்க முத முதல்ல ஓட்டல் திறந்தவுடனே இந்த அலையுற வேலை வேண்டாம்னு சர்வரா சேர்ந்தேன். அங்கதான் சமையல் கத்துகிட்டேன். மாச சம்பளம் பதினாலு ரூபா தான். ஆனால் ஓட்டல் சாப்பாடு இருக்கறதுனால வேற எந்த செலவும் இல்லை. வெளியிலதான் படுத்து தூங்கினேன். கொஞ்சம் கொஞ்சமா காசு செத்து இன்னைக்கு பெங்களூர்ல வீடு வெச்சிருக்கேன். ரெண்டு பசங்களையும் ஒரு பெண்ணையும், மினிஸ்டர் பசங்க படிக்கிற காலேஜில படிக்க வெச்சேன். (கார்மெல் ) இந்த காலத்து மாச்டருங்களுக்கு பொறுப்பே இல்லை. கால காலத்தில் கல்யாணம் பண்ணி இருந்தா இப்படி எல்லாம் ஊதாரித்தனமா குடிச்சிட்டு ஊர் சுத்தாதுங்க." என்றார்.

நீங்கள் வேலை செய்த காலத்தில் விஜய் மல்லையா மலிவா சாராயம் வித்துருக்க மாட்டார் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். அவர் சொன்னதில் கொஞ்சம் நியாயம் இருக்கிறது. ஆனால் முன்தினம் மாஸ்டரிடம் பேசிக் கொண்டிருந்தபோது,  "தினம் அடுப்பு முன்னால நிக்குறதுனால உடம்பு சூடாயிடுது, தண்ணி போடாம தூங்க முடியல" என்று அவர் சொன்னது நினைவுக்கு வந்தது. மாஸ்டர்கள் எல்லாம் குடிகாரகள் ஆயிட்டாங்க என்று அந்த முதலாளி சொன்னது உண்மையாய் இருந்தாலும், அதுக்கு பின்னால எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன.

பதிவு முடிஞ்சு போச்சு. உங்களுக்கு என்ன மேலாண்மை பாடங்கள் தோணுதோ எடுத்துக்கோங்க. இந்த மாதிரி பிரச்சினைகளை நீக்க ஏதாவது வழி தெரிஞ்சா சொல்லுங்க. சற்றே நீளமான மொக்கை பதிவுக்கு மன்னிக்கவும். இதுவரை பொறுமையா படிச்சிருந்தா உங்களுக்கு ஒரு பாராட்டு :-)

6 comments:

Nikanth Karthikesan said...

திருமணம் பத்தி ஏதாவது நல்லத பார்த்தாலோ கேட்டாலோ உங்களுக்கு சந்தோஷமா பெருமையா இருக்குன்னு நினைக்கிறன். சந்தேகமே வேணாம் நல்ல விஷயம் தான் அது :)

பெண்களின் ஏழு பருவங்கள்: பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்.

ஆண்களின் ஏழு பருவங்கள்: பாலன், மீளி, மறவோன், திறவோன், காளை, விடலை, முதுமகன்

Sankar said...

திருமணம் நல்ல அமைதியான சமுதாயத்துக்கு தேவையான ஒன்று என்பதில் எந்த எதிர் கருத்தும் இல்லை. ஆண்களின் பருவங்கள் பற்றிய தகவலுக்கு நன்றி. இதில் என்ன சிறப்பு என்றால் இந்த கேள்வியை நான் கேட்ட இரண்டு மூன்று நாட்களில் பேஸ்புக்கில் தமிழ் குழுவில் இதே தகவலை தெரிவித்தார்கள்.

Nikanth Karthikesan said...

எந்த கேள்விய?

Sankar said...

ஆண்களின் பருவங்கள் என்ன என்ற கேள்வி

Test Papers said...

itexamstube.com brings the full range of IT Certifications materials in PDF format written by IT Experts with 100% money back guarantee in case of failure. BrainDumps

Anonymous said...

Do you know how to keep a good mood. Just remember to pay attention to the fashion trend of Paris Hermes such as Hermes Constance Handbag or the other styles like Kelly Hermes Bag. I promise you will relax yourself. So come on, know more fashion style arround you and make yourself more confidence. You will like it.