Skip to main content

நானும் படிப்பளிதான் 2

இது நானும் படிப்பளிதான் - பாகம் 2

முதல் பாகம் இங்கே

பள்ளி நாட்களிலும், கல்லூரியிலும், என்னுடன் படித்தவர்களில், ஏதோ எனக்கு தான் நிறைய தமிழ் தெரியும் என்று ஒரு இறுமாப்பு எப்போதுமே இருந்திருக்கிறது. என் பள்ளி நாட்களில் எங்கள் வகுப்பில் இருந்த எந்த ஒரு மாணவனையும்/மாணவியையும் விட நான் அதிகமாகவே தமிழ் நூல்களையும், கதைகளையும் வாசித்து வந்ததாக ஒரு ஆணவம் இருந்திருக்கிறது. தமிழ் வழிக் கல்வியில் படித்த (Tamil medium ) சிலரையும் விட எனக்குத் தான் இலக்கணம்/இலக்கியம் அதிகம் தெரிந்ததாக ஒரு திமிர் இருந்திருக்கிறது. இதை கண்கூடாக அனுபவித்தும் இருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது "வளர்சிக்கன்" என்று ஒரு கோழி விளம்பரம் பார்த்தேன். "வளர்சிக்கன் என்றால் வினைத்தொகையா !? வளர்ந்த சிக்கன், வளர்கின்ற சிக்கன், வளரப்போகும் சிக்கனா ? அது எப்படி இறந்த பிறகு வளரும் ? " என்று மொக்கை போட்டால், என் தமிழ் வழி பயின்ற நண்பன் (
சொந்த ஊரில்) வினைத்தொகை என்றால் என்ன என்று கேட்டான். இதெல்லாம் என் மமதையை அதிகப்படுத்தின.


கல்லூரி நாட்களில் லாவண்யா என்ற அழகான ;) பெயரில் "தினம் ஒரு கவிதை" என்று ஒரு யாகூ குழுவை நானும் என் நண்பர் பாலகிருஷ்ணனும் கண்டு பிடித்தோம். பிறகு தான் தெரிந்தது அதை எழுதியவர் ஒரு ஆண் என்று. திண்ணை போன்ற இணையதளங்களும் அப்போது தான் பரிச்சயமானது. திண்ணையில் ஒரு சிலர் மிக நன்றாக எழுதினாலும், பெரும்பான்மையானோர் அறம் (பிளேடு தமிழ்ப்படுத்தல்)  போடவே செய்தனர். 

வேலைக்குச் சேர்ந்த பின்னர், கார்க்கி, அதிஷா, லக்கிலுக், ஜாக்கி சேகர், கேபிள் சங்கர், பிரியா கதிரவன்  என்று அருமையான சமகால வலைப்பதிவாளர்களை சந்திக்க நேர்ந்தது. இவர்களின் எழுத்துகள் திண்ணை, தீராநதி போன்றவற்றில் இருப்பதைப் போல் மொக்கையாக இல்லாமல், எளிய தமிழில் இருந்தது. ஆனாலும் மனதுக்குள் ஏதோ நம் தமிழறிவு மிக அதிகம் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. சுவாரசியமான வலைப்பதிவு நடையில் இல்லாமலும், அதே சமயம் திண்ணை போல இலக்கிய மொக்கை போடாமலும், நல்ல கற்பனை வளத்துடனும், மொழி வளத்துடனும் யாரும் எழுதுவதே இல்லை என்று தோன்றிக் கொண்டே இருந்தது. நடுவில் சாரு என்றொரு ஆளின் வலைப்பதிவுகளை படித்தேன், எரிச்சல் தான் வந்தது. இலக்கியமே வேண்டாம் என்று விட்டு விடலாம் என்று தோன்ற வைத்து விட்டார். ஜெமோ மாதிரி சிலரின் பதிவுகளைப் படித்தாலும் அதிலும் ஒன்றும் பெரிதாக மொழி/கற்பனை வளமெல்லாம் இருப்பதாக தோன்றவில்லை.

அப்போது தான் தமிழ் டுவீட்டர் தொடர்பு கிடைத்தது. என்னுடைய உண்மையான தமிழறிவின் தரத்தை, டுவிட்டர் மூலமாகவே நான் அறிந்து கொண்டேன். சொற்களுக்குள் அடக்க முடியாத அளவுக்கு சிறந்த அறிவு கொண்டோர் இங்கு உள்ளனர். குறிப்பாக, சொக்கன், இலவசக் கொத்தனார், கண்ணபிரான் ரவிசங்கர், ராகவன் ஆகியோர். இவர்கள் நால்வரின் முன் என் அறிவானது சச்சின் முன் சஞ்சய் பாங்கர் போல அத்தனை பாதாளத்தில் கிடக்கும். என் ஆணவம் போக்கி, என்னை வெட்கப்பட வைத்தவர்கள் இந்த நால்வரும் ஆவர். அதிலும் முதல் இருவராவது வயதானவர்கள் என்று எனக்கு நானே அனுமானித்துக் கொண்டு விட்டேன். ஆனால் கடைசி இருவர் என்னை வாயடைக்க வைத்தவர்கள். என் வயதில் யாரும் அதிகமாகத் தமிழ் படித்திருக்க மாட்டார்கள் என்ற என் எண்ணத்தை தவிடுபொடி ஆக்கியவர்கள், இவர்கள் இருவரும். இவர்கள் உண்மையாகவே தமிழ் நாட்டில் தான் படித்தார்களா என்று வியக்க வைத்தவர்கள். 

இவர்கள் நால்வர் தவிர, என்னை வியக்க வைக்கும் பலரும் டுவிட்டரில் இருக்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர் அரவிந்தன். வடமொழி தவிர்ப்பு என்பதை நான் இயன்றவரை கடைபிடிக்க காரணம் இவரே ஆவார். சரவணகார்த்திகேயன் என்பவர் டுவீட்டரில் எப்போதும் ஏதாவது "மதுமிதா மதுமிதா" என்று, குணா கமல் போல, குப்பையாகக் கொட்டிக் கொண்டிருந்தாலும் (மன்னிக்கவும் :) ) இவருடைய சாதனைப் பட்டியலைப் பார்த்தால் அதிசயிக்கத் தக்க வகையில் உள்ளது. நானும் மூன்று மாதமாக ஒரு சிறுகதைக் கருவை வைத்துக் கொண்டு எழுதாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறேன். இவர் எப்படித்தான் சந்தில் இருக்கும் அவ்வளவு பெண்களுக்கும் டுவீட் போட்டுவிட்டு, ரீ-டுவீட்டும் போட்டுவிட்டு, மாத இதழ்களுக்கும் கட்டுரைகளெல்லாம் எழுதுகிறாரோ !? சொக்கனும் இதைப் போலவே வியக்க வைப்பவர்.  இவர்கள் தவிர பத்ரி, பலராமன், அமாஸ்32  என்று பல தமிழ் ஆர்வலர்களையும் பார்க்க நேர்ந்தது.  இவர்கள் தவிர அருமையான டுவீட்டர்கள் பலரும் (குறிப்பாக அரட்டைகேர்ல், திரு. ஜில் போன்றோர்) இருக்கிறார்கள். ஆனால் இலக்கியப் பாதையில் செல்வதால் அவர்களை ஒதுக்கி விடுவோம். இது தவிர நிறைய தமிழ் நண்பர்களையும் டுவிட்டர் அறிமுகம் செய்தது. (அட்டவணை போட்டால் பெரிதாகப் பொய் விடும்)

என் பள்ளி நாட்களில் இருந்ததை விட பல மடங்கு ஆர்வத்தை தமிழின் மேல் கொண்டு வந்தவர்கள் நான் மேற்சொன்ன அந்த நால்வரும் ஆவர். என்னுடைய அடுத்த சென்னை பயணத்தின் போது, இலவசம் எழுதிய வெண்பா  நூலையும், அவர்கள் அறிமுகப்படுத்திய வேறு சில நூல்களையும் வாங்கி வந்து, என் தமிழை கொஞ்சம் உயர்த்திக் கொள்வதாக உத்தேசம். இப்போதைக்கு அவர்கள் நால்வருக்கும் எனது நன்றி. ஏகலைவன் போல உங்களை தூரத்தில் இருந்தே பார்த்து பலவற்றை நான் கற்றுக் கொண்டேன் :)

Comments

Unknown said…
தமிழில் தட்டச்சுகிற அத்தனை பேரையும் இணையம், இலக்கியத்தை நோக்கி எளிதில் செலுத்திவிடுகிறது. இலக்கியத்தை விட்டு விலகுவதற்கு தான் மனதிடம் தேவை. இலக்கியவாதியாக மனமிருந்தால் போதும்:-)
//வேலைக்குச் சேர்ந்த பின்னர், கார்க்கி, அதிஷா, லக்கிலுக், ஜாக்கி சேகர், கேபிள் சங்கர், பிரியா கதிரவன் என்று அருமையான சமகால வலைப்பதிவாளர்களை//

List is having a wrong pointer in the end.
Sankar said…
@jill: :)

@பிரியா: இல்லவே இல்லை :) எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.
maithriim said…
Very nice! Will be following your blog from now on :-)

amas32

Popular posts from this blog

HTTP Query Params 101

Target Audience: Beginners / Novice
Summary A long time ago, we had simpler lives with our monolithic apps talking to relational databases. SQL supported having myriad conditions with the WHERE clause and conditions. As time progressed, every application became a webapp and we started developing HTTP services talking JSON, consumed by a variety of client applications such as mobile clients, browser apps etc. So, some of the filtering that we were doing via SQL WHERE clauses now needed a way to be represented via HTTP query parameters. This blog post tries to explain the use of HTTP Query Parameters for newbie programmers, via some examples. This is NOT a post on how to cleanly define/structure your REST APIs. The aim is to just give an introduction to HTTP Query Parameters.
Action Let us build an ebooks online store. For each book in our database, let us have the following data:
BookID - String - Uniquely identifies a book
Title - String
Authors - String Array
Content - String - Base64 …

சைவமும் வைணவமும் தமிழும்

சைவம், வைணவம், இரண்டு சமயங்களும் தமிழ் இலக்கியத்தில் பெரும் பங்கு ஆற்றி இருக்கின்றன. இசுலாமியம், கிருத்துவம் இரண்டும் தமிழ்நாட்டில் வளரும் முன்; பவுத்தம், சமணம் இரண்டும் அழித்த பின்; சைவமும் வைணவமும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டாலும், இரண்டுமே தமிழ் இறை இலக்கியங்களை வளர்த்திருந்திருக்கின்றன. இரண்டுமே ஓரளவு தமிழ்ச் சிதைப்பும், வடமொழி தூக்கிப் பிடிப்பும் செய்திருக்கின்றன. kryes, சைவத்தோடு ஒப்பிடுகையில் வைணவம் குறைவாகவே தமிழுக்கு தீங்கு விளைவித்ததாக சொல்லி இருக்கிறார் ("தமிழ் முன் செல்ல", இன்ன பிற) (அவர் அப்படி நேரடியாக சொல்லாமல் இருக்கலாம், ஆனால் நான் அப்படிப் புரிந்து கொண்டிருக்கிறேன்).

கடந்த சில மாதங்களாக யூடியூபில், சைவ வைணவ காணொளிகளைப் பார்த்து வருகிறேன். அதில் அவதானித்த சில கருத்துகள் கீழே. (முன்குறிப்பு: இதெல்லாம் எனக்குத் தோன்றியவை. இவை உண்மையாக இருக்கத் தேவையில்லை. உங்களுக்கு இதெல்லாம் தோன்றாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதற்காக என்னிடம் சண்டை போட வேண்டாம் :) )

1) சைவ இலக்கியங்கள், (கிருத்துவம் போலவே) நிறைய அச்சங்களை ஊட்டுகின்றன. "நாய் நரிக்கோ இரை எதற்கோ (உடல்…

Engeyo Partha Mayakkam - Yaaradi Nee Mogini

கண்ணதாசன், வாலி, வைரமுத்து என்னும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் வரிசையில், மேற்சொன்னவர்களுக்கு அடுத்த இடம் கொண்டவர் திரு நா முத்துக்குமார் அவர்கள். "ஒவ்வொரு பூக்களுமே" பாடலுக்கு இந்திய அரசின் விருது கிடைத்த போது, இவருக்கு இன்னும் கிடைக்கவில்லையே என்று வருந்தினேன். இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வாங்கினார் பின்னாளில். இதனைப் பாராட்டி வெண்பாவெல்லாம் எழுதினேன் எனது முகநூலில். என்றாவது ஒரு நாள் நேரில் பார்த்தால் காட்டலாம் என்று இருந்தேன்.


இவர் பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி இருந்தாலும், யுவன்சங்கர்ராஜா உடன் பணியாற்றிய பாடல்கள், அக்காலத்தைய இளைஞர்கள் மத்தியில் மிகுந்த புகழ் பெற்றவை.


இயக்குநர் செல்வராகவன் திரைக்கதையில் ஒரு பொது அம்சம்: ஒரு உதவாக்கரை நாயகன் இருப்பான், வீட்டில் உட்பட யாரும் மதிக்க மாட்டார்கள், எங்கிருந்தோ தேவதை போல ஒரு பெண் வருவாள், நாயகன் அவளுக்காகத் திருந்தி முன்னேறுவான். "யாரடி நீ மோகினி" படத்திலும் இதே கதை அமைப்பு உண்டு. அப்போது நாயகன், நாயகியை முதல் முறை, கண்டதும் காதல் கொண்டதும், பின்னணியில் ஒலிக்கும் பாடல், நாமு வரிகளில் "எங்கேயோ பார்த்த ம…