Skip to main content

nenjukulle + kadal

நேற்று மணிரத்தினம் அவர்களின் 'கடல்' திரைப்படத்திலிருந்து, "நெஞ்சுக்குள்ளே" என்ற பாடல் வெளியானது. வைரமுத்து அவர்களின் வைரவரிகளுக்கு இரகுமான் அவர்கள் இசை அமைக்க,  அருமையான குரலுடன் (ஆனால் கொஞ்சம் சுமாரான உச்சரிப்புடன்) ஒரு பாடகி அவர்கள் பாடி இருந்தார்கள். ஒளி+ஒலி வடிவத்தில் இங்கும் , ஒலி வடிவத்தில் இங்கும் கேட்கலாம்.

சமீபமாய் வெண்பா எழுதும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏதோ என்னால் ஆனதைக் கொஞ்சம் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன். அமலா, பொங்கல், ஆண்டாள் என்று அது பாட்டுக்கு எனக்கு பிடித்த வழியில் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் நேற்று இரவு நீயா நானா பார்த்து விட்டு படுத்ததும் மேற்சொன்ன கடல் பாடலைக் கேட்க நேர்ந்ததும், திரைப்பாடலா,க மெட்டுக்கு பாட்டு எழுதினால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. விளைவு, நேற்று வெளியான கடல் பாடல் மெட்டுக்கு என் வரிகள் கீழே. படித்து/பாடி விட்டு கருத்து சொல்லுங்கள். அதற்கு முன் சில குறிப்புகள்:
  • வைரமுத்து அவர்கள் பயன்படுத்திய "நெஞ்சுக்குள்ளே" என்ற சொல்லையே, தொடங்க, பயன்படுத்திக் கொண்டேன்.
  • இப்பாடல் நெய்தல் நிலப் பகுதியில் வசிக்கும் தலைவி, தலைவனைக் கண்டு பாடுவதாக கற்பனை செய்து இயற்றி இருக்கிறேன். பாட்டில் கடல்வாசம் வீச வேண்டும் என்று விருப்பம்.
  • கடல் பாடலை பாடவிட்டு, இந்த வரிகளைக் கூட சேர்ந்து பாடிப்பாருங்கள். அப்போதுதான் இதனை உங்களால் உணரமுடியும். தனியாகப் படித்தால் சந்த ஒலிகள் அவ்வளவு நன்றாக இருக்காது (திரைப்பாடல்களும் வெண்பாவும் இந்த சேதியில் நேரெதிர்)
  • ஒரு முறை பாடலை முழுதும் படித்து விட்டு, பிறகு கூடசேர்ந்து பாடிப் பாருங்கள்.

என்ன தோன்றுகிறதோ கருத்து சொல்லுங்கள் :) 

=======================

நெஞ்சுக்குள்ளே வந்து விழுந்தீரே
என் கண்ணுக்குள்ளே காதல் மழை பொழிந்தீரே
கண்ணி  வலை வீசி விட்டீர் முன்னாடி
கன்னி எந்தன் மனசுக்கு  தூண்டில் போட்டீர் பின்னாடி 
கடல் அலையோடு பனைமரப் படகாடும்
உன் துடுப்போடு துடிக்குமென் மனசாடும்

மீன் வாசம் மட்டும் கண்டே வகை சொல்லும் மன்னவனே மன்னவனே
பெண் வாசம் மட்டும் உனக்கு  புரியலையே 
வானம் முட்டும் தூரம்வரை விரைந்து செல்லும் மாலுமியே மாலுமியே
என் வாசல் மட்டும் உனக்கு தெரியலையே 

நெஞ்சுக்குள்ளே வந்து விழுந்தீரே

நெஞ்சுக்குள்ளே வந்து விழுந்தீரே
என் கண்ணுக்குள்ளே காதல் மழை பொழிந்தீரே

சரணம் - 1 
உச்சி கருத்திருச்சே ஊரும் உறங்கிடுச்சே
இச்சைக் ஏறிப்போய் கச்சை கலைஞ்சிடுச்சே
ஆசைப் பெருமூச்சினிலே என்காதல்  சினுங்கையிலே
ஓசைக் கடல்கூட ஒருநொடிதான் அடங்கிடுச்சே

நெஞ்சுக்குள்ளே வந்து விழுந்தீரே
என் கண்ணுக்குள்ளே காதல் மழை பொழிந்தீரே

சரணம் - 2
கட்டி இழுத்துடுச்சே கதவை சாத்தி அடைச்சிடுச்சே
மெட்டி மேல் ஆசையது மனசுக்குள்ள புகுந்துடுச்சே
கட்டில் மேல் கவனம் எல்லாம் கண்தாண்டிப் போயிடுச்சே
தொட்டில் அது வேண்டும் என்று நெஞ்சுக்குதான் தோணிடுச்சே

நெஞ்சுக்குள்ளே வந்து விழுந்தீரே
என் கண்ணுக்குள்ளே காதல் மழை பொழிந்தீரே
கண்ணி  வலை வீசி விட்டீர் முன்னாடி
கன்னி எந்தன் மனசுக்கு  தூண்டில் போட்டீர் பின்னாடி 
கடல் அலையோடு பனைமரப் படகாடும்
உன் துடுப்போடு துடிக்குமென் மனசாடும்

===============

பிகு: இந்த பாடல் வரிகளை நீங்கள் பாடுவதற்கோ, வேறு வியாபார நோக்கங்களுக்கோ வேண்டுமெனில் தாராளமாய் பயன்படுத்தவும். எனக்கு எந்த சன்மானமும் இதற்காக வேண்டாம் :) ஆனால் ஒரு அஞ்சல் அனுப்பி விட்டீர்கள் என்றால் மகிழ்வேன். இது CreativeCommons Zero License அடிப்படையில் உலகுக்கு அளிக்கப்படுகிறது. 

Comments

Unknown said…
அருமை. மிக மிக அருமை. தாங்கள் கூறியவாறே உண்மையான பாடலின் ஸ்ருதியிலியே இந்த வரிகளை பாட முயற்சி செய்து பார்த்தேன். மிக நேர்த்தியாக கோர்வையில் வருகிறது! And like the PS too :-) Any specific reason behind naming the post in english ?
Sankar said…
@விக்னேஷ்: நன்றி :) தலைப்பை ஆங்கிலத்தில் வைக்கக் காரணங்கள் (1) பின்னாளில் கூகிளில் நானோ பிறரோ தேடுவதற்கு இலகுவாக இருக்கும் (2) தமிழில் தலைப்பு வைத்தால் blogger அந்த சொற்களை விட்டு விட்டு மொட்டையாய் ஒரு URL ஐத் தரும் (எல்லோரும் தட்டச்ச உதவும்படி) (http://psankar.blogspot.in/2012/09/blog-post.html போல) ஆனால் அது அவ்வளவு இரசிக்கும்படியாக இல்லை. அதனால்தான்.

Popular posts from this blog

Repairability

My Macbook Pro I have a Macbook pro retina 15 inch, that I bought in 2016. A few days back, the battery started bulking up and the laptop has totally stopped working. It has grown so big now that I cannot keep the laptop in a flat surface; it almost rocks like a see-saw. The touchpad panel is also feeling the bulge. The Macbook pro is not even switching on now, presumably to safeguard against battery explosions. I bought the laptop 4 years back, for about 200,000 INR (~2700 USD / 2200 EUR). Electronics are very costly in India :( This is the pre-touchbar Macbook pro. I did not like the new keyboard in the then new Macbooks (the first edition with the touchbar). Luckily, I did not purchase the touchbar version which probably is one of the worst electronic devices ever manufactured. I took my macbookpro today to a nearby Apple service center and I was told that the battery replacement would cost about 40,000 INR (~550 USD / 450 EUR). For such a costly laptop, it has a terrible battery lo

சைவமும் வைணவமும் தமிழும்

சைவம், வைணவம், இரண்டு சமயங்களும் தமிழ் இலக்கியத்தில் பெரும் பங்கு ஆற்றி இருக்கின்றன. இசுலாமியம், கிருத்துவம் இரண்டும் தமிழ்நாட்டில் வளரும் முன்; பவுத்தம், சமணம் இரண்டும் அழித்த பின்; சைவமும் வைணவமும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டாலும், இரண்டுமே தமிழ் இறை இலக்கியங்களை வளர்த்திருந்திருக்கின்றன. இரண்டுமே ஓரளவு தமிழ்ச் சிதைப்பும், வடமொழி தூக்கிப் பிடிப்பும் செய்திருக்கின்றன. kryes, சைவத்தோடு ஒப்பிடுகையில் வைணவம் குறைவாகவே தமிழுக்கு தீங்கு விளைவித்ததாக சொல்லி இருக்கிறார் ("தமிழ் முன் செல்ல", இன்ன பிற) (அவர் அப்படி நேரடியாக சொல்லாமல் இருக்கலாம், ஆனால் நான் அப்படிப் புரிந்து கொண்டிருக்கிறேன்). கடந்த சில மாதங்களாக யூடியூபில், சைவ வைணவ காணொளிகளைப் பார்த்து வருகிறேன். அதில் அவதானித்த சில கருத்துகள் கீழே. (முன்குறிப்பு: இதெல்லாம் எனக்குத் தோன்றியவை. இவை உண்மையாக இருக்கத் தேவையில்லை. உங்களுக்கு இதெல்லாம் தோன்றாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதற்காக என்னிடம் சண்டை போட வேண்டாம் :) ) 1) சைவ இலக்கியங்கள், (கிருத்துவம் போலவே) நிறைய அச்சங்களை ஊட்டுகின்றன. "நாய் நரிக்கோ இரை எதற்கோ (உ

GNOME vs Canonical, Freedesktop.org - A Neutral Observation & Summary

Few sensational things happened last week in one of the oldest debates of the Linux community, GNOME vs KDE, touching on the topic of freedesktop.org and joined this time by the new hot topic, " GNOME vs Canonical ". The bulk of the actions happened in the comments section of two blog posts, one by Dave Neary (1) , well-known GNOME advocate and another post by Aaron Seigo (2) , well-known KDE Developer. I want to improve my writing skills and the ability to get information from a community discussion. So, below is a step in that direction. Disclaimer : All opinions are personal and none of the views expressed represent my employer, NASA, WHO or anyone else for that matter. The following is the juice of the events of last week written from a (as honest as possible) neutral perspective. Read through this post if you don't want to read through all the comments in the mentioned blog posts. GNOME 3 release is just days away. Canonical and the GNOME community have ta